விஜய்யின் நாளைய தீர்ப்பு எனும் படத்தில் நடித்திருந்த கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கும். தளபதி விஜய் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம் தான் நாளைய தீர்ப்பு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தனா நடித்திருந்தார்.
இவர் அதிக படங்களில் நடிக்க வில்லை. இருப்பினும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித்துடன் அப்போதே நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தனாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.