அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ஒருவருக்கு 54,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டிராவில் வார்னர் எனும் நபர் Lewisville’s SignatureCare என்ற மருத்துவ அவசர மையத்திற்கு கொரோனா பரிசோதனைக்காக சென்றுள்ளார். அங்கு அந்த நபர் கொரோனா பரிசோதனை முடிந்து ரிசல்ட்டுக்காக மையத்தில் காத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிராவிஸ் வார்னர் தனது கொரோனா பரிசோதனை ரிசல்ட்டை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதாவது PCR பரிசோதனைக்காக அந்த நபரிடமிருந்து 54,000 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பின் படி ஒரு டெஸ்டுக்கு ரூ. 40 லட்சம் வாங்கப்பட்டுள்ளது. இது போன்று ஏற்கனவே கொரோனா பரிசோதனைக்காக அமெரிக்காவில் பணம் அதிக அளவில் வசூலிக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மருத்துவ நிறுவனம் பில் போடும் போது இந்த நிகழ்வு தவறுதலாக நடைபெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்காக அமெரிக்காவில் 8 டாலர் முதல் 15 டாலர் வரை மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.