தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் இவர் சமீபத்தில் டாக்டர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வினை ராய் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் பேட்டி எடுத்த போது ஹீரோவாக இருந்த உங்களுக்கு வில்லனாக மாற வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது என கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த வினை ராய் “துப்பறிவாளன் படத்தில் மிஸ்கின் தான் முதன் முதலில் வில்லனாக தன்னை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனிப்பட்டமுறையில் தனக்கு போன் பண்ணி வில்லனாக நடிப்பதற்கு முடியுமா என கேட்டார். அதன் பிறகு கதையை கேட்டுவிட்டு சம்மதித்தேன். அதோடு ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்கலாம். இயக்குனர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம்” என கூறியுள்ளார்.