அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகின்ற 16-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கின்றது.
இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறுகின்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.