ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாலய அமாவாசை வருகின்றது.
அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் கூடுவார்கள் என்பதாலும், கோவிலில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அதிகமாக வருவதாலும் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதனால் வருகின்ற 5 மற்றும் 6 ஆகிய இரு தேதிகளிலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் வழிபடும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்லவும், நீராடவும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் 3 வது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலா அறிவித்துள்ளார்.