அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி(நேற்று) முதல் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் அலகாபாத் வங்கி, போன்ற மூன்று வங்கிகளில் பழைய காசோலை புத்தகங்கள் செல்லாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து வங்கிகளில் பல மாற்றங்கள் மாத வாரியாக அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அக்டோபர் மாதமான நேற்று முதல் டெபிட் கார்ட் முதல் பென்ஷன் வரையில் பல அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, மற்றும் அலகாபாத் வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் மற்றும் எம். ஐ.சி.ஆர் குறியீடுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாடிக்கையாளர் புதுபிக்க தவறினால் வங்கிகளின் மூலமாக வழங்கப்படும் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் காசோலை புத்தகத்திலேயே ஐஎஃப்எஸ்சி கோடு மற்றும் எம் ஐ சி ஆர் கோட் பதியப்பட்டிருக்கும். அதை அடுத்து, புதிய காசோலைப் புத்தகத்தை சம்பந்தப்பட்ட வங்கிகளின் கிளைகளில் பெற்றுக் கொள்வதுடன் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ கட்டணம் இல்லாத கஸ்டமர் கேர் நம்பரான 18001802222 இந்த எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டு அறியலாம். புதிய காசோலை புத்தகத்தை பெறுவதன் மூலம் பண பரிவர்த்தனை தடையில்லாமல் நடைபெறும்.