தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை படிப்படியாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தி நாளான இன்று மற்றும் மிலாடி நபி நாளான அக்டோபர் 19ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் பார்கள், தனியார் பார்கள் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவை மீறினாலோ அல்லது சட்டவிரோதமாக மது விற்றாலோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories