Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்கள் தங்கள் வாக்கை செலுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைக்கவேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை மீறி வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |