இந்தியா பிரித்தானியாவிலிருந்து வருபவர்களுக்கு பரஸ்பர கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பரஸ்பர (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியாவில் விதிக்கப்படும்) கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அக்டோபர் 4 முதல் இந்தியாவில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளும் அக்டோபர் 4 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவராக இருந்தால் பின்வரும் நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
1.கொரோனா ஆர்டி-பிசிஆர் சோதனையை பயணிகள் அனைவரும் பயணத்திற்கு முன்பு 72 மணி நேரத்திற்குள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
2.அதன் பிறகு ஆர்டி-பிசிஆர் சோதனையை இந்திய விமான நிலையம் வந்தடைந்தவுடன் மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.இதையடுத்து ஆர்டி-பிசிஆர் சோதனையை இந்தியாவிற்கு வந்த எட்டாவது நாளிலும் மேற்கொண்டிருக்க வேண்டும்.
4.அதோடு மட்டுமில்லாமல் இந்தியா வந்தடைந்த பயணிகள் செல்லும் இடத்திலோ அல்லது தங்கும் வீட்டிலோ கட்டாயம் 10 நாட்கள் தனிமையில் இருத்தல் வேண்டும்.
5.இதற்கிடையே MOCA மற்றும் MOH&FW-ல் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா கட்டுபாடுகளை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.