Categories
உலக செய்திகள்

இயல்பு நிலைக்குத் திரும்பிய பொதுமக்கள்…. மெல்ல மெல்ல குறைந்த கொரோனா…. ஜப்பானின் அதிரடி முடிவு….!!

ஜப்பானில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்ததையடுத்து அந்நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சீனாவிளிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து ஜப்பான் அரசாங்கம் கொரோனா தொற்றை தடுக்க அந்நாட்டில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.

மேலும் சீனாவிளிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியினை ஜப்பான் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தற்போது கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமர் அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக ஜப்பானில் போடப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஜப்பான் நாட்டின் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்கள்.

Categories

Tech |