புதுச்சேரியில் உள்ள பெரியார் நகரில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் இந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தலைமையில் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்தகவல் அறிந்து வந்த இன்ஸ்பெக்டர் பாபுஜி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதன்படி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினார். அதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.