விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
பிரான்ஸ் நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் டிரேம் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து ஒற்றை இன்ஜின் உடைய சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. குறிப்பாக விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த சில மணி நேரத்திலேயே திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.