பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இராணுவ வீரர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து பெட்ரோல் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் எரிபொருள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இராணுவ ஓட்டுனர்கள் சுமார் 200 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்திருக்கிறது. எனினும், கிறிஸ்துமஸ் பண்டிகை வரைக்கும் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும் என்று நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் எச்சரிகைவிடுத்துள்ளார்.
மேலும், அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்த விநியோக தட்டுப்பாடானது உலக அளவில் இருக்கிறது. எனவே பிரிட்டன் அரசாங்கம் மட்டும் இதனை சரிசெய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
எங்களால் முடிந்த அளவிற்கு இதனைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். இவ்வாறு பணவீக்கம் அதிகரிப்பது, நாட்டின் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு குளிர்காலத்தை எதிர்கொள்ள சவாலாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.