Categories
உலக செய்திகள்

35 வருடமாக தேடப்பட்ட தொடர்கொலைக்காரன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் 35 வருடங்கள் கழித்து கண்டறியப்பட்ட கொலைகுற்றவாளி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து, இளம் பெண்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் பல வருடங்களாக தேடி வந்தனர். இந்நிலையில் Montpellier நகருக்கு அருகே இருக்கும் Grau-du-Roi என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று, அந்த தொடர்கொலைக்காரன் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்பு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு வரை அந்தக் கொலைகாரன் தொடர்பில், முகத்தில் பல குழிகள் இருக்கும் என்று தான் அடையாளம் கூறப்பட்டு வந்தது. அதன்பின்பு சமீபத்தில் தான் அந்த கொலைகாரன் தொடர்பில் சில விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, அந்த தொடர் கொலைகாரன், கடந்த 1986ஆம் வருடத்திலிருந்து 1994ஆம் வருடம் வரை பாரிஸ் நகர ராணுவ பிரிவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அதன்பின்பு, அந்த கொலைகாரனை கண்டறிய காவல்துறை அதிகாரிகள் சுமார் 750 பேருக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

காவல்துறையினர், அந்த நபரை பிடிப்பதற்கு நெருங்கிவிட்டார்கள். அந்த சமயத்தில் Francois Verove என்ற முன்னாள் காவல்துறை அதிகாரி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்திருக்கிறார். அவர் தன் DNA ஆதாரங்களையும் சேகரித்து வைத்திருந்துள்ளார்.

அவர் எழுதியிருந்த கடிதத்தில், “பல வருடங்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளி, நான் தான்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட இடங்களில் கிடைத்த DNA,  இந்த நபர் சேகரித்த DNA-வுடன் ஒத்துப்போனது. இது மட்டுமல்லாமல், பல்வேறு வழக்குகளுடன் ஒப்பிட்டால், கற்பழிப்பு கொலை வழக்குகள் பலவற்றுடன் ஆதாரங்கள் பொருந்தியது.

கடந்த 1986-ஆம் வருடத்தில் ஏப்ரல் மாதம் 8 வயதுடைய சிறுமியை கொன்றதில் தொடங்கி, ஒரு மாதத்திற்கு பின் 11 வயதுடைய சிறுமி, கடந்த 1987-ஆம் வருடத்தில் 21 வயது இளம்பெண், கடந்த 1987-ஆம் வருடத்தில் 14 வயது சிறுமி, கடந்த 1994-ஆம் வருடத்தில் 11 வயது சிறுமி, அதே வருடத்தில் 19 வயது இளம்பெண் என்று 6 பேர் இவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல், மேலும் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டதோடு, திருட்டு மற்றும் சிறுவர்கள் கடத்தல் போன்ற பல வழக்குகள் இவர் மீது இருக்கிறது. ஆனால், கடந்த 1997-ஆம் வருடத்திற்கு பிறகு, தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |