Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை ரூ.36 உயர்வு ….எண்ணெய் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ….!!

ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36 ஆக உயர்ந்து ரூ.1867.50 விற்பனை செய்யப்படுகிறது

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் போன்றவற்றின் விலைகள் உயர்ந்து கொண்டு வருகிறது. அதன்படி நேற்று சமையல் சிலிண்டரின் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.

வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மட்டும் மாற்றப்பட்டது. இந்தவகை சிலிண்டர்கள் ஓட்டல்கள் மற்றும் டீக்கடை ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த  சிலிண்டர்கள் ரூ. 36 ஆக உயர்ந்து ரூ.1867.50 ஆக விலை உயர்ந்துள்ளது. அதனைப் போலவே எக்ஸ்டிரா டெஜ் சிலிண்டர் வகை ரூ.36 ஆக உயர்ந்தது 1889.50 விலைக்கு விற்கப்படுகிறது.மேலும் புதிதாக 5 கிலோ சிலிண்டர் வாங்கினால் ரூ.10 அதிகரித்து ரூ.1462.50 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஹோட்டல்கள் மற்றும் டீக்கடை நடத்துபவர்கள் கூறியது, சிலிண்டர்களின் விலை இவ்வாறு உயர்ந்து கொண்டே சென்றால் சிலிண்டர்கள் பயன்படுத்த முடியாது. மேலும் சிலிண்டர்களின் விலை உயர்ந்தது என்று உணவுப் பொருட்களின் விலையை அதிகரித்தால் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதில்லை. இதனால் கடை நடத்துவது கடினமாக உள்ளது . எனவே இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இதை கருத்தில் கொண்டு சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

Categories

Tech |