Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் பரவிய கொரோனா…. 50% குறையும் உயிரிழப்பு…. அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் மாத்திரை ஒன்றை கண்டறிந்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவில் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மெல்னுஃப்ரவிர் என்னும் மாத்திரையை கண்டறிந்துள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்ட இந்த மாத்திரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் ஏற்படும் உயிரிழப்புகளை 50% வரை குறைப்பதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |