Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் பயணி செய்த மோசமான செயல்.. கலிபோர்னியாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு பயணி டாக்ஸியில் ஏறிய பின்பு, ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டை என்ற பகுதியில் வசிக்கும் அட்ரியோன் ஸ்மார்ட் என்ற நபர், கால் டாக்ஸியை அழைத்திருக்கிறார். அதில் பயணம் மேற்கொண்ட அவர் திடீரென்று ஓட்டுனரை தவறான உறவுக்கு அழைத்துள்ளார். ஓட்டுனர், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு, அட்ரியோன் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியை  காட்டி மிரட்டி ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

அட்ரியோன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவர் மீதான குற்றம்  நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் 2ஆம் தேதி அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |