Categories
அரசியல்

இதுலாம் வெட்கப்படணும்…! நாங்க திமுகவோடு இருப்போம்…. அண்ணாமலை அதிரடி …!!

திமுக நல்ல விஷயங்களை செய்யும் போது எதிர்க்கட்சியாக கூட இருப்போம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிலேயே ஒரு தலைவர் இருக்கிறார். பலமுறை எம்எல்ஏ ஆனவர், மைனாரிட்டி கமிஷன் உடைய சேர்மனாக இருக்கக்கூடிய ஐயா பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், ஒரு புகைப்படத்தை போடுகிறார். 15 மணி நேரம் விமானத்தில் வந்து நேரடியாக அலுவலகத்தில் இருக்கக்கூடிய கோப்புகளைப் பார்த்து, நம்முடைய ஊழியர்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றம் கட்டிடத்தை எப்படி கட்டுகிறார் என்று பார்க்கப் போகிறார்.

சம்பந்தமில்லாமல் ஒரு மார்ப் போட்டோ.. யாரோ ஒரு போட்டோகிராபரை  இன்செட் பண்ணி அந்த படத்தை டுவிட்பண்ணிவிட்டு மோடிஜியை பற்றி குற்றம் சுமத்துகிறார். பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் உண்மையாலும் வெட்கப்பட வேண்டும். அதாவது ஒரு பாரம்பரியம் மிக்க கட்சியில் வந்து ஒரு விஷயத்தை இது போல் டுவிட் செய்கிறார்.

டுவிட் செய்தால் கூட பரவாயில்லை அதை வந்து நியாயப்படுத்துகிறார். இது வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல, இதே போல் போலிப் பிரச்சாரங்கள் இந்தியாவில் எடுபடாது என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். எதிர்க்கட்சியாக நல்ல வேலைகள் செய்யும் பொழுது கூட இருப்போம், தவறாகப் போகும் போது கண்டிக்கின்றோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

 

Categories

Tech |