Categories
மாநில செய்திகள்

தேர்தல் நியாயமா நடக்கணும்…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலானது 9 மாவட்டங்களுக்கு வருகின்ற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரமானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து அ தி மு க தேர்தல் பிரிவு துணை செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் மற்றும் இதனை துணை ராணுவத்தை இராணுவத்தின் துணையுடன் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு  ஆகியோர் இக்கோரிக்கையை பரிசீலித்து மாநில தேர்தல் ஆணையர் கூறும்விதத்தில் நடக்குமாறு தமிழ்நாட்டிற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கானது நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு  முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடியதாவது, “தேர்தலானது மிகவும் பாதுகாப்புடன் வாக்குசாவடிகளிலும், எந்திரங்கள் வைக்கப்படும் இடங்களிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் அதிமுகவின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எந்த புகாரும் தெரிவிக்கும் வகையில் அமையாமல் மிகவும் தேர்தலை நியாயமாக  நடத்த வேண்டுமென தேர்தல் அதிகாரிகள் உறுதி அளிக்க வேண்டும்”என்று ஆணையிட்டார்.

 

Categories

Tech |