ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்துள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.