ஆப்கானிஸ்தான் IEA படை, காபூல் நகருக்கு வடக்கில் இருக்கும் ஐ.எஸ்-கே மறைவிடத்தில் நடத்திய சோதனையில் பல போராளிகள் கொல்லப்பட்டதாக IEA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
IEA செய்தித் தொடர்பாளரான Bilal Karimi, பர்வான் மாகாணத்தில் இருக்கும் கரிகார் நகரத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். எனினும், உயிரிழந்தது எத்தனை பேர்? மற்றும் கைதானது எத்தனை பேர்? என்ற தகவல்களை அவர் கூறவில்லை. சமீபத்தில் நகரத்தின் சாலைப்பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் தொடர்புகொண்ட, ஐ.எஸ்-கே போராளிகள் இருவரை IEA படை கைது செய்துள்ளது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, ஐ.எஸ்-கே மறைவிடத்தை கண்டறிய உதவியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
IEA படை, நாட்டை கைப்பற்றியதிலிருந்து, அதன் உறுப்பினர்களை குறிவைத்து, ஐ.எஸ்-கே போராளிகள் அதிகமாக தாக்குதல் நடத்துகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில், காபூல் விமான நிலையத்தின் வெளியில், ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தியதில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 169 நபர்களும், அமெரிக்க படையை சேர்ந்த 13 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.