சென்னை உயர்நீதிமன்றம் புரட்டாசி சனிக்கிழமையில் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று அறநிலையத்துறை கோரியுள்ள வழக்கிற்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதை அடுத்து விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகயாசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்போது தமிழ்நாட்டில் கொரானா தொற்று பரவல் குறைந்து வருகின்ற நிலையில் இந்து சமய வழிபாட்டில் புரட்டாசி, மார்கழி ஆகிய இரு மாதங்களும் மிகவும் முக்கியமான மாதங்கள். இந்த மாதம் சனிக்கிழமை அன்று வழிபாட்டிற்கு உகந்தவையாகும். அதனால் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.