Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது கடமை…. ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியே இலக்கு…. முதல்வர் ஸ்டாலின்!!

வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சி அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.. இந்த கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் பொது மக்களிடம் முக ஸ்டாலின் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்..

இதையடுத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. பாப்பாபட்டி மக்களால் போற்றப்படும் உதயசந்திரன் எனக்கு தனிச் செயலாளராக உள்ளார்.

ஒற்றுமை இல்லாத ஊரில் சமத்துவம் வளராது. கடைக்கோடி மனிதனின் குரலையும் கேட்பேன், திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202ஐ நிறைவேற்றியுள்ளோம், மீதமிருக்கும் வாக்குறுதிகள் மட்டுமின்றி இன்னும் என்னென்ன தேவையோ அதையும் நிறைவேற்றுவோம்.. நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்..

தமிழ்நாட்டில் வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க பாடுபடுவேன். பாப்பாபட்டியில் ஊராட்சி மன்றக் கட்டடம், அங்கன்வாடி மையம் நியாய விலை கடைக்கு கட்டடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி தரப்படும். ரூ 6 லட்சம் செலவில் கரையான்பட்டியில் கதிரடிக்கும் இயந்திரம் அமைக்கப்படும்..  வட மாவட்டம், தென் மாவட்டம் என வேற்றுமை பார்க்காமல் ஒட்டு மொத்த தமிழக வளர்ச்சி அரசின் இலக்கு என்றார்..

முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், காரை விட்டு முதல்வர் ஸ்டாலின் இறங்கி கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயல் வெளிக்கு சென்று நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் நலம் விசாரித்து கோரிக்கைகளை கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |