Categories
மாநில செய்திகள்

குழந்தையை பத்திரமாக மீட்பார்கள்… எனக்கு நம்பிக்கை உள்ளது… புதுச்சேரி முதல்வர்..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு  26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் தற்போது சுர்ஜித் 80 அடி ஆழத்திற்கு சென்று விட்டான்.

மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 24 மணி நேரம் ஆகி விட்டது. ஒருநாளை கடந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. குழந்தை மேல் 2 அங்குலத்திற்கு மேல் மண் விழுந்துள்ளதால் சீக்கிரமாக மீட்க வேண்டும் என மீட்பு படையினர் செயல்பட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

Image result for நாராயணசாமி,

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. வடமாநிலங்களில் இம்மாதிரியான பிர்ச்னைகள் நடந்துவந்த நிலையில், தற்போது தென் மாநிலங்களிலும் பரவிவருகிறது. மேலும் புதுச்சேரியில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதை விவசாயத் துறை அலுவலர்கள் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |