Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் வாங்கி தரேன்…. மனு அளித்த இளைஞர்கள்….. சூப்பிரண்டு விசாரணை….!!

இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்ட வாலிபர் குறித்து காவல்துறை சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் வசிக்கும் 30-க்கும் அதிகமான இளைஞர்கள் துணை காவல்துறை சூப்பிரண்டு புகஷேந்தி கணேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் புன்னை மூலபட்டு பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் எங்களுக்கு பத்திரிக்கை துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு பணத்தை வாங்கி கொண்டு, பின் எங்களுடைய லேப்டாப்பில் பத்திரிக்கை துறை சம்பந்தமான தரவுகளை பதிவேற்றம் செய்து தருவதாகக் கூறி அதையும் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து நீண்ட நாள் ஆகியும் வேலை வாங்கி தராத காரணத்தினால் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது காலம் தாழ்த்தி வருவதால் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து எங்களுடைய லேப்டாப் மற்றும் பணத்தை திரும்பப் பெற்று தர வேண்டுமென இளைஞர்கள் சூப்பிரண்டுக்கு அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |