கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரவுடி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
கொலை நடந்தது எப்படி?
ரவுடி மஞ்சுநாத் அவரது காதலியுடன் மகாதேவாபுரம் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் மஞ்சுநாத்தை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்துக் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால் மஞ்சுநாத்தை வெட்டிய கும்பல் எதைப் பற்றியும் சட்டைசெய்யாமல் அங்கிருந்து சென்றது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சி அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதில் குற்றவாளிகளின் முகம் தெளிவாகப் பதிவாகவில்லை. பட்டப்பகலில் சாலையின் நடுவே நடந்த இந்தக் கொலை தொடர்பாக பெங்களூரு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இதுபோன்று கொலைகள் நடைபெறுதால் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.