சிறுமியை கற்பழித்த வழக்கில் முதியவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள வேம்கள் பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசப்பா என்பவரால் கற்பழிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் வெங்கடெசப்பா என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் வெங்கடேசப்பாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வெங்கடேசப்பா சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் நரேந்திரா மற்றும் அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது வழக்கு விசாரணையில் வெங்கடேசப்பாவுக்கு விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் பரபரப்பாக தீர்ப்பளித்தனர்.