Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

யார் வேலையா இருக்கும்…. அடுத்தடுத்து திருட்டு சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளக்கரை பகுதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மற்றும் ரேடியோ, அர்ச்சனை பொருட்கள் ஆகியவற்றில் திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இதே கோவிலிலும் அருகாமையில் இருக்கும் கங்கை அம்மன் கோவிலும் பூஜை பொருட்கள் திருடு நடந்திருக்கிறது. எனவே கோவில்களில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவம் காரணத்தினால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |