எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் ரயில்வே காவல்துறையினர் திடீரென சோதனை செய்துள்ளனர்.
அப்போது வெளிமாநிலத்தில் இருந்து 100-க்கும் அதிகமான மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.