Categories
உலக செய்திகள்

தாவரங்களின் இசையை கேட்கக்கூடிய கருவி கண்டுபிடிப்பு.. எவ்வளவு ரூபாய்..? வெளியான தகவல்..!!

தாவரங்களின் இசையை நாம் கேட்கும் வகையில் பிளாண்ட்வேவ் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய நவீன உலகில் அனைத்துமே தொழிநுட்பமயமாகிவிட்டது. இந்நிலையில் தாவரங்களிலிருந்து வரும் ஒலியை நாம் கேட்கக்கூடிய வகையில் ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாண்ட்வேவ் என்று பெயரிடப்பட்ட இந்த கருவி, இந்திய மதிப்பில் 22,200 ரூபாய்.

இந்த கருவியை மொபைல் போனுடன் இணைத்து தாவரங்களின் இசையை கேட்க முடியும். இதன் மூலம், பூக்கள், செடிகள், மரங்கள், காளான்கள் மற்றும் போன்சாய் என்று அனைத்து தாவரங்கள் வெளியிடும் இசையையும் கேட்க முடியும். இலைகளில் இக்கருவியினுடைய மின் முனைகள் இரண்டையும் வைத்தால் தாவரங்களில் இருக்கும் மின் மாறுபாட்டை கண்டுபிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செடிகளில் உண்டாகும் மாறுபாடுகள் அலைகளாகி, அவை இசையாக மாறுகிறது. இன்ஸ்டாகிராம் இணையதளத்தில், பிளாண்ட்வேவ் கருவி மூலம் எவ்வாறு தாவர இசையை கேட்க  முடிகிறது? என்பது தொடர்பான பல வீடியோக்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் மரங்கள் அல்லது செடிகளில் இருக்கும் இறந்த இலைகளில் இசை வராது. ஆரோக்கியமாக இருக்கும் இலைகளில் தான் ஒலி உருவாகும்.

MIDI சிந்த்ஸ், டிஜிட்டல் ஆடியோ மூலமாக இந்த கருவி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி விற்பனைக்கு வர சில காலங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையை நேசிக்கும் நபர்களுக்கு இந்த கருவி அதிக மகிழ்ச்சியை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |