Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைன் மூலம் மோசடி… ஏமார்ந்த லாரி டிரைவர்… சைபர் கிரைம் போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் பரிசுத்தொகை விழுந்ததாக கூறி நுதன முறையில் பணத்தை மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஓம்சக்தி நகரில் லாரி டிரைவரான முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போனில் போன்-பே செயலி மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரின் செல்போன் எண்ணிற்கு போன்-பே நிறுவனத்தின் பெயரில் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் முத்துராமலிங்கத்திற்கு 1,957ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு போன்-பே செயலிக்குள் சென்று ரகசிய எண்ணை அழுத்த வேண்டும் என இருந்துள்ளது.

பரிசுத்தொகையை பெறவேண்டும் என ஆர்வத்தில் வங்கி கணக்கின் ரகசிய ரகசிய குறியீட்டை அழுத்தியுள்ளார். இதனையடுத்து சிறிது வினாடிகளிலேயே முத்துராமலிங்கத்தின் வங்கி கணக்கில் இருந்து 1,957 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடனடியாக ஆன்லைன் மூலம் ராமநாதபுரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் தலைமையில் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோல் ஆன்லையில் நுதன முறையில் ஏமாற்றும் கும்பல் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |