Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிறைவேற்றப்படாத தேவைகள்…. பொதுமக்களின் திடீர் போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பேரூராட்சியில் ரங்கம்புதூர், எம்.ஜி.ஆர். நகர், நெகமம், சின்னேரிபாளையம், காளியப்பன்பாளையம், உட்பட 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் கே.கே. நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் செயல்படவில்லை என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பல நாட்களாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் திடீரென நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நெகமம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

மேலும் செயல் அலுவலரிடம் இது குறித்து கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் தாங்கள் அவதிப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். இதேபோன்று புதிதாக வீடு கட்ட அனுமதி வாங்க செல்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை என்று கோரிக்கை விடுத்தால் அதனை சரியாக நிறைவேற்றுவதில்லை என்றும், பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பேரூராட்சி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |