பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்த கொடூரத் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு நேற்று ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி குற்றம்சாட்டப்பட்ட மோகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கவும், மாணவி படித்து முடித்ததும் படிப்பிற்கு ஏற்ற பணி வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், நன்றாக படித்து வந்த மாணவி சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததை அறிந்த ஆசிரியர், மாணவியிடம் விசாரித்தபோது நடந்தவற்றை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதையடுத்து, ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவி ஈரோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர், மோகனை கைது செய்தனர்.