1,020 புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து பேருந்தில் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் பகுதியில் சோதனைச்சாவடி அமைந்திருக்கிறது. இந்நிலையில் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் சக்திவேல் என்பவர் 1,020 புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய குற்றத்திற்காக சக்திவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1,020 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.