Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதை சரி பண்ண வேண்டும்…. அவதிப்படும் வாகன ஓட்டுனர்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதி மற்றும் அதன் சுற்றி இருக்கும் இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால் பாதுர் உள்பட நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நிற்கின்ற காரணத்தினால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி குறைவான வேகத்தில் வாகனங்களை ஓட்டி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |