Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதியவர் தீக்குளிக்க முயற்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள நங்கவள்ளி தேவேந்திர தெருவில் முதியவர் நரசிம்மராஜ் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் நரசிம்மராஜ் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நரசிம்மராஜ் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நரசிம்மராஜை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் நரசிம்மராஜ் கூறியதாவது “கடந்த 2003-ஆம் ஆண்டு எனக்கு சொந்தமான 4 1/2 ஏக்கர் நிலத்தை 2 பேருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தேன். ஆனால் குத்தகை காலம் முடிந்து சில வருடங்களாகியும் அவர்கள் என் நிலத்தை திருப்பி கொடுக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நரசிம்மராஜிடம்  தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |