பிக் பாஸ் பிரபலம் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலமானவர் கவிஞர் சினேகன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் அவர் மிக அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞன் என பலரும் தெரிந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கவிஞர் சினேகன் அண்மையில் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சினேகன் தனது மனைவியின் பெயரை கையில் பச்சை குத்தி உள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CUf2htuhtcg/?utm_source=ig_embed&ig_rid=b7c79951-c55e-4411-bee0-2a42bdcf7eed