பஞ்சாப் மாநில கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிடம், அம்மாநில முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் இவரது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கையில் நவ்ஜோத் சிங் சித்து ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் காந்தி, சாஸ்திரி போன்றோரின் கோட்பாடுகளை என்றும் நிலைநாட்டுவேன். மேலும் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு தான் துணையாக நிற்பேன். இந்நிலையில் என்னை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் முயன்று வருகின்றன. ஆனால் அவர்களால் அதை செய்ய இயலாது என்று பேசியுள்ளார்.