தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தீதம்பட்டி யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக ஆட்சி வந்த சில மாதங்களிலேயே முதல்வர் ஸ்டாலின் நிறைய திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். இதனால் அதிமுகவிற்கு திமுக மீது பயம் எழுந்துள்ளது .
திமுக செயல்பாடுகள் அதிமுக விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் என்று கூறினார். அதன்பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவிக்கு சொந்தமான ஆதார் மையங்களில் பணிபுரியக்கூடிய பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக கொடுத்த புகாரில், உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அடித்தளம் நன்றாக அமையவில்லை என்று அவர் கூறியதற்கு கனிமொழி நகைச்சுவையாக உள்ளது என்று கூறினார்.