மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
14 வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் குவித்தார். டெல்லி அணி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதன்பிறகு 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா- தவான் ஜோடி சொற்ப ரன்னில் வெளியேற, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் ,ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் முன்னணி விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க மறுபுறம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி கொண்டு சென்றார் .இறுதியாக டெல்லி அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாது நடப்பு சீசனில் 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது .