தேர்தலின் விதியை மீறி வேட்பாளர்கள் சுவரொட்டியில் விளம்பரம் செய்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் வேட்பாளர்கள் களம் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் தேர்தலின் விதி மீறல் குறித்து வேட்பாளர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதனை அடுத்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர அரசு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை அனுமதியின்றி சுவரொட்டிகளில் ஒட்டி விளம்பரம் செய்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் தேர்தல் விதியை மீறியதாக 2 வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.