Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’ கிளிம்ப்ஸ் வீடியோ செய்த மாஸ் சாதனை… செம குஷியில் அஜித் ரசிகர்கள்…!!!

வலிமை கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கார்த்திகேயா, யோகி பாபு, ராஜ் ஐயப்பா, சுமித்ரா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Ajith's 'Valimai' Glimpse Finally Out & It's Really Something Big!

இந்த படம் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் வலிமை கிளிம்ப்ஸ் வீடியோ யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |