Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு இன்ஜினியர். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில் விஷ்ணுவரதன் வித்தியாசமான முறையில் முடிதிருத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் விஷ்ணுவரதனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மன உளைச்சலில் இருந்த விஷ்ணுவரதன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஷ்ணுவரதன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |