Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை…..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தொடங்கப்பட்ட இந்தப் பணி 27 மணி நேரத்தை கடந்த பின்பும் தொடர்கிறது. 85 அடியில் இருந்த குழந்தை படிப்படியாக 100 அடிக்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புக் குழுவினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்எல்சி, ஓஎன்ஜிசி தீயணைப்புத் துறையினர் இணைந்து 1 மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழிதோண்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் லேசாக மழை பெய்து வருகிறது. ஆழ்துளைக்குள் மழைநீர் செல்வதை தடுக்க தார்பாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் திருச்சி அருகே வந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மழை காரணமாக மீட்புப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |