திமுகவில் சமூக ஊடகத்தில் வேலை செய்கின்ற நண்பர்கள் பள்ளி, கல்லூரிகளில் படித்து விட்டு வர வேண்டும் என அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.
காமராஜர் நினைவு நாளை அனுசரித்து, அவரின் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சமூக வலைத்தளங்களில் பாஜக தலைவராவதற்கு முன்பு நீட் தேர்வை எதிர்த்து, பாஜக தலைவராக மாறியதும் நீட் தேர்வை ஆதரிப்பது போன்ற கருத்து பரவி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சமூக வலைத்தளத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நண்பர்கள் செய்கின்ற பல வேளைகளில் இதுவும் ஒன்று. பிஜேபியில் சேர்வதற்கு முன்னால் news18 தமிழ்நாடு சேன்னலில் கொடுத்த பேட்டியில் நான் பேசி இருப்பேன்.
தமிழ்நாடை பொருத்தவரை பாடத்திட்டத்தில் பிரச்சனை இருக்கு, அதனால் விதிவிலக்கு கேட்டிருந்தார்கள், கொடுக்கப்பட்டிருக்கிறது. பாடத்திட்டம் சரி செய்யாதவரை விதிவிலக்கு தேவைப்படும் என்று சொல்லிருந்தேன். அதன் பின்பு பார்த்தீர்கள் என்றால்… நம்முடைய எடப்பாடி அண்ணன் அவர்களுடைய அரசு, இரண்டு விதமான விஷயங்களை செய்து இருக்கின்றார்கள். 2019இல் 11ஆம் வகுப்பு பாட திட்டங்களை முழுமையாக மாற்றியாச்சு பண்ணியாச்சு, 2020இல் பன்னிரண்டாம் வகுப்பு பாட திட்டத்தை முழுவதுமாக மாற்றியாச்சு.
இந்த இரண்டு பாடத்திட்டங்களை மாற்றியதற்கு பிறகு போன வருடம் நடந்த நீட் கேள்வியில் 180 கேள்வியில் 172 கேள்வி நம்முடைய பாடத்திட்டம். இந்த வருடம் நடந்த நீட் தேர்வில் நம்முடைய வல்லுநர்கள் சொல்கிறார்கள்….. 82 சதவீதத்தில் இருந்து 85 சதவீதம் நம்முடைய பாடத்திட்டத்தில் இருந்து வந்திருக்கிறது என்று… சொல்லப்பட்ட காரணம் உண்மை தான், சொல்லிய பின்பு நம்முடைய நீட் பாடத்திட்டங்கள் அனைத்தும் கூட மாறியுள்ளது. அதனாலதான் 2020இல் மிகப்பெரிய ரிசல்ட் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. 2021ல் மிகப்பெரிய ரிசல்ட் கிடைத்துள்ளது. அதனால் திமுகவில் சமூக ஊடகத்தில் வேலை செய்கின்ற நண்பர்கள் மறுபடியும் பள்ளி, கல்லூரிகளில் படித்து விட்டு வேலை செய்ய வேண்டுமென பரிவோடு கேட்டுக்கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்தார்.