கேரளாவில் டீக்கடை நடத்தி வரும் வயதான தம்பதி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
கேரளாவில் டீக்கடை நடத்தி வருபவர் கேஆர் விஜயன் மற்றும் இவருடைய மனைவி மோகனா. இந்த ஜோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகின்றனர். இவர்கள் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக தெரிகிறது. அதோடு வருகிற 21ம் முதல் 28ம் வரை ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறுகின்றனர். அப்போது அவர்களுடைய பேரனையும் அழைத்து செல்கிறார்களாம்.
கே ஆர் விஜயன் இதுகுறித்து கூறுகையில், ” நாங்கள் கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிநாடு சென்றிருந்த்தோம்.அதன்பிறகு தற்போது செல்கிறோம் என்று கூறினார். இவர்கள் 2017 தங்கள் பயணத்தை தொடங்கியதாகவும் இதுவரை 25 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர். தற்போது 26வது நாடாக ரஷ்யாவிற்கு செல்ல இருப்பதாகவும் கூறுகின்றனர்.