Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு விற்கவும் கூடாது…. வெடிக்கவும் கூடாது…. எங்கு தெரியுமா….?

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் மூன்றாம் அலையினை கவனத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில்  ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வெடிக்கவும் விற்பனை செய்யவும் மாநில அரசு தடை விதித்துள்ளது. நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி வாங்க மக்கள் கூட்டம் கூடினால் தொற்று பரவ கூடும் என்ற காரணத்தினால் இந்த தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |