Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “சுய பெருமை பேசுபவரிடம் விலகியிருங்கள்”… வாகனத்தில் செல்லும்போது கவனம்.!!

மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கக்கூடிய மேஷராசி அன்பர்களே..!! இன்று சுய பெருமை பேசுபவரிடம் விலகி இருப்பது நல்லது. கூடுதல் செயல்திறனும் உழைப்பு மட்டுமே இன்று இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். புதிய இனங்களில் பண செலவு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனமாக செல்லுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலனை  கொடுக்கும். இன்று சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி ஒருவரின் பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

நட்பு ரீதியில் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை  கொடுக்கும். நீங்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து இன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். தடைகள் விலகி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். இன்று நண்பர்களினால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று முடிந்தால் வெள்ளை நிறத்தில் ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ வைத்துக்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். இன்று தீபாவளி என்பதால் உங்களுடைய கஷ்டங்களையும், பிரச்சினைகளையும், துன்பத்தையும் தூக்கி போட்டுவிட்டு மனதை ஒருநிலைப்படுத்தி தீபாவளியை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |