Categories
தேசிய செய்திகள்

அப்பாடா குறைஞ்சிருச்சி…! நவ-1 முதல் பள்ளிகள் திறப்பு…. கேரள அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கமானது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகம், புதுச்சேரி டெல்லி, போன்ற மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் அதிகமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று பறவல் குறைந்து வருகிறது. அதனால் அம்மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.

அதனையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாநிலத்திலுள்ள பள்ளிகளில் வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை மற்றும் 10- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும். எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்த நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத வேறு பணியாளர்கள் கண்டிப்பாக இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியையும் போட்டிருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |