பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தை கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணி அளவில் லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் சுமார் 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது.
👶 Her Royal Highness Princess Beatrice and Mr Edoardo Mapelli Mozzi have named their daughter Sienna Elizabeth Mapelli Mozzi.
👣 The couple have said, “We are all doing well and Wolfie is the best big brother to Sienna.” pic.twitter.com/J7PNxn2EjI
— The Royal Family (@RoyalFamily) October 1, 2021
இந்த நிலையில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் அந்தப் பெண் குழந்தைக்கு “சியன்னா எலிசபெத் மாபெல்லி மோஸ்ஸி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தை சியன்னா எலிசபெத்தின் கால் அச்சுடன் கூடிய புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 12-வது கொள்ளுப் பேத்தியான சியன்னா, அவரது தாய் பீட்ரைஸ்-க்கு பிறகு 11-வது இடத்தில் சிம்மாசனத்தில் உள்ளார்.